அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விரைவாக விசாரித்து முடிக்கப்படும்: தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விரைவாக விசாரித்து முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மனுக்களை விசாரிக்க கால நிர்ணயம் தேவையில்லை என்றும் மனுதாரர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. ஐகோர்ட் உத்தரவுபடி ஏற்கனவே 10 பேரிடம் விசாரணை நடத்தி. எழுத்துப்பூர்வ மனு பெறப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.