அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவது, ஆடு நனைவதற்கு ஓநாய் கவலைப்படுவது போல உள்ளது: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
சென்னை: அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவது, ஆடு நனைவதற்கு ஓநாய் கவலைப்படுவது போல உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலை போன்றவர்களால்தான் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. நாகரிகமற்ற அரசியல் பண்பாட்டை அண்ணாமலை தொடர்ந்து விதைத்து வருவதாகவும் ஆர்.பி.உதயகுமார் கண்டனம்தெரிவித்துள்ளார்.