அதிமுக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
சென்னை : அதிமுக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பதன் மூலம் கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷா கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தனிக்கட்சி ஆட்சியா?, கூட்டணி ஆட்சியா? என்பதில் அதிமுக-பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.