Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Monday, August 11 2025 Epaper LogoEpaper Facebook
Monday, August 11, 2025
search-icon-img
Advertisement

அதிமுகபற்றி பேச பல கட்சி தாவும் ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதியில்லை: அதிமுக ஐடி விங் பதிலடி

சென்னை: அதிமுக பற்றி பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘தவெக ஏன் அதிமுகவை எதிர்ப்பது இல்லை’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘அதிமுக பல தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. அதிமுகவுக்கு மக்களே நல்ல தண்டனை கொடுத்துள்ளனர். எதிர்க்கட்சியை எதிர்ப்பதற்கு எந்த காரணமும் இல்லை. அதனால்தான் அதனை எதிர்க்கவில்லை” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து, அதிமுக ஐடி விங் எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு: தொழிலதிபராக இருந்து, ‘திடீர்’ அரசியல்வாதியாகி, பல கட்சி தாவுவதில் கைதேர்ந்த வித்தகரான ஆதவ் அர்ஜுனாவிற்கு அதிமுக பற்றி பேச எள்ளளவும் தகுதி இல்லை. இன்று தவெகவில் அமர்ந்துகொண்டு கருத்து கூறும் நீங்கள், நாளை எந்த கட்சியில் இருப்பீர்கள் என்று தெரியவில்லை. எனவே, உங்கள் கருத்துக்கு பதில் அவசியம் இல்லை. இவ்வாறு அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது.