Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை!!

சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் போதிய பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை என புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. கூடுதல் பேருந்து இயக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் விரிவான ஆலோசனை நடத்தி வருகிறார்.