சென்னை : நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்துள்ளார்.இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார். அதில், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படத்தில், தன்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement


