சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தன் இயல்பான நடிப்புத் திறனால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியின் மறைவு வருத்தமளிக்கிறது என பாமக அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். நட்சத்திர நடிகர்களோடு இணையாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் என பாஜக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சரோஜாதேவி மறைவு இந்திய சினிமாவுக்கு பெரும் இழப்பு என கர்நாடக முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் தனிப்பெரும் ஆளுமையாக வலம் வந்தவர் சரோஜாதேவி என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
+
Advertisement


