நடிகர் சூர்யா இப்படித்தான் செய்கிறாரா? மாணவிகளை கட்டிப்பிடிப்பதை நடிகர் விஜய் நிறுத்த வேண்டும்: தவாக தலைவர் வேல்முருகன் பேச்சு
விழுப்புரம்: தவெக தலைவர் விஜய் மாணவிகளை கட்டிப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டுமென தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த கட்சி நிர்வாகியின் குடும்ப விழாவில் தவாக தலைவர் வேல்முருகன் பேசியதாவது: நானும் ஆயிரக்கணக்கான மாணவர்களை படிக்க வைக்கிறேன். விஜய் தற்போதுதான் பரிசுகளை கொடுக்கிறார். விஜய் குறித்து நான் பேசியதில் என்னுடைய பேச்சை முழுமையாக கேட்டுவிட்டு என்னோடு விவாதிக்க வரவில்லை.
நடிகர்கள் அஜித், ரஜினிகாந்த் ஆகியோர், நான் ஒரு கலைஞர் மக்களை மகிழ்விப்பவன் என்று தெரிவித்துள்ளனர். அதனால்தான் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அரசியல் கட்சி தொடங்கவில்லை. உண்மையிலே கல்விக்கு உதவி புரியும் பல தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் இதுபோன்று ஷோ நடத்துகிறார்களா?
கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோர்கள், சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களையும் விஜய் அவமானப்படுத்தி விட்டார். மாணவர்கள், அவர்களின் குடும்ப ஓட்டுகளுக்காக இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். நடிகர் சூர்யா இதுபோன்றுதான் மாணவிகளை கட்டிப்பிடித்து வழங்குகிறாரா? இனியாவது நடிகர் விஜய் இந்த பழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.