சென்னை: போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது. இருவரின் ஜாமின் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. போதைப்பொருள் வழக்கில் கடந்த 23ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த், 26ம் தேதி நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டனர்.
+
Advertisement


