மும்பை: கடந்த 16ம் தேதி அதிகாலை பாந்த்ராவில் நடிகர் சைஃப் அலிகான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் திருட வந்த கொள்ளையன், அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றான். உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து காயமடைந்த சைப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முதுகெலும்பில் சிக்கியிருந்த கத்தியின் முனைப்பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. 6 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கையில் பேண்டேஜுடன் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை நோக்கி கையசைத்த படி நடந்து வந்த சைஃப் அலிகான் காரில் ஏறி வீட்டுக்கு சென்றார். இதற்கிடையில், சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வங்கதேசத்தைச் சேர்ந்த அமின் பகிர்(30) கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


