Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி அலுவலகத்தின் மூலம் பள்ளிகளின் அனைத்து செயல்பாடுகளும் அலுவலர்களால் கண்காணிக்கப்படும்

* அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்

கடலூர் : குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டத்திற்கான புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படும் குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் குறிஞ்சிப்பாடி வட்டார இயக்க மேலாண்மை அலகினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றாக குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

அதற்கிணங்க குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டத்திற்கான புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி அலுவலகத்தின் மூலம் தொடக்கக் கல்வி துறையின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 113 தொடக்கப் பள்ளிகளும், 28 நடுநிலைப்பள்ளிகளும் செயல்படுகின்றன.

அவ்வாறு இயங்கும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அரசின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் பணிகளையும் மற்றும் பள்ளிகளின் அனைத்து செயல்பாடுகளும் வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

எனவே, அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை சரிவர கொண்டு சேர்க்கவும், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தேர்ச்சி விகிதத்தை கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர் திட்டத்தின் வாயிலாக பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் வகையில் சுய உதவிக் குழுக்கள் மூலம் வங்கி கடன் இணைப்பு திட்டங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி வட்டார இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக ஏழை எளிய மற்றும் மகளிர்களைக் கொண்டு குழுக்கள் அமைத்தல், குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து மேம்படுத்துதல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி இணைப்பு மற்றும் நிதி ஆதாரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டது என தெரிவித்தார்.

ஆய்வின்போது குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டாட்சியர் விஜய் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், ராமச்சந்திரன், வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.