Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு

ஐநா: அனைத்து அம்சங்களிலும் மிகவும் சந்தேகத்துக்குரிய சாதனையை பாகிஸ்தான் கொண்டுள்ளது என ஐநா பொது சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி குற்றம் சாட்டினார். ஐநா பொது சபையில் அமைதி கலாசாரம் என்ற தலைப்பிலான கூட்டத்தில் கடந்த புதன்கிழமை பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி முனிர் அக்ரம்,‘‘காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்த சட்டம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் உள்ளிட்ட விஷயங்களை எழுப்பினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று முன்தினம் உரையாற்றிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ்,‘‘ அமைதி கலாச்சாரம், இரக்கம் காட்டுதல் என்ற அனைத்து மதங்களின் அடிப்படை போதனைகளுக்கு நேர் எதிரானது தீவிரவாதம். இது முரண்பாட்டை விதைக்கிறது, விரோதத்தை வளர்க்கிறது. தேவாலயங்கள், குருத்வாராக்கள், மசூதிகள், கோயில்கள் உள்ளிட்ட புனிதத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் நாங்கள் கவலையடைகிறோம்.

இதுபோன்ற செயல்களுக்கு உலகளாவிய சமூகத்தின் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த பதில் தேவை.காந்தியால் போற்றப்பட்ட அகிம்சை கோட்பாடு இந்தியாவின் அமைதிக்கான உறுதிப்பாட்டின் அடித்தளமாகத் தொடர்கிறது.

இந்தியா, இந்து, பவுத்தம், ஜைனம், சீக்கிய மதங்களின் பிறப்பிடமாக மட்டுமல்லாமல், இஸ்லாம், யூதம், கிறிஸ்தவம், ஜோராஸ்ட்ரியனிசத்தின் கோட்டையாகவும் உள்ளது. மேலும் நீண்டகால பன்முகத்தன்மையை விளக்குகிறது. மத, மொழியியல் பன்முகத்தன்மையுடன், பல்வேறு கலாச்சாரங்கள், சகிப்புத்தன்மை இந்தியாவின் சகவாழ்வுக்கு ஒரு சான்றாகும். தீபாவளி, ஈத், கிறிஸ்துமஸ் மற்றும் நவ்ரூஸ் போன்ற பண்டிகைகள் மத எல்லைகளை கடந்து, பல்வேறு சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அனைத்து அம்சங்களிலும் மிகவும் சந்தேகத்துக்குரிய சாதனையை பாகிஸ்தான் கொண்டுள்ளது’’ என்றார்.