Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2 மாதம் பல் கூட துலக்க முடியவில்லை: விபத்தின் வலி குறித்து ரிஷப் பன்ட் பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஒரு ஆண்டுக்கு பின் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார். தற்போது டி.20 உலக கோப்பையில் பங்கேற்கும் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், தனக்கு நிகழ்ந்த கோர விபத்தின் வலி குறித்து, ஷிகர் தவான் தொகுத்து வழங்கிய “தவான் கரேங்கே” நிகழ்ச்சியில் பன்ட் பேசுகையில், “காயத்திலிருந்து மீண்டு வரும்போது தன்னம்பிக்கை மிகவும் முக்கியம்.

ஏனென்றால் நம்மை சுற்றி விமர்சனங்கள் இருக்கும். மேலும் ஒரு தனிநபராக, எது நல்லது என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும். விபத்து எனக்கு வாழ்க்கையை மாற்றிய அனுபவமாக இருந்தது. அதற்குப் பிறகு நான் எழுந்தபோது, ​​​​ உயிருடன் இருப்பேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை, ஆனால் கடவுள் என்னைக் காப்பாற்றினார். 2 மாதங்கள் பல் துலக்கக்கூட முடியவில்லை, 6 முதல் 7 மாதங்கள் தாங்க முடியாத வலியால் அவதிப்பட்டேன். இப்போது நான் கிரிக்கெட்டில் மீண்டும் வருகிறேன், அழுத்தத்தை விட அதிகமாக, நான் உற்சாகமாக இருக்கிறேன். இது 2வது வாழ்க்கை என்று நான் உணர்கிறேன், அதனால் நான் உற்சாகமாக இருக்கிறேன். ஆனால் பதற்றமாக இருக்கிறேன், என்றார்.