சென்னை: பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த வாரம் பயங்கரவாதிகளை கைதுசெய்தனர். அபுபக்கர் சித்திக் என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். 1999ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் முகமது அலி என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா நேற்று கைதுசெய்யப்பட்டார். கடுமையான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்து தமிழ்நாடு காவல்துறை சாதனை படைத்துள்ளது. பயங்கரவாதிகளை பிடிக்க தமிழ்நாடு போலீஸ் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது என தெரிவித்தார்.
Advertisement