Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆளுநர் பதவி ஒழிப்பு, வாக்கு சீட்டு முறையில் தேர்தல்: விவசாயி கடன் தள்ளுபடி ஜிஎஸ்டி, நீட் தேர்வு ரத்து; விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களைவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

சிதம்பரம் அருகே ஜெயங்கொண்டபட்டினத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தேர்தல் அறிக்கையை திருமாவளவன் வெளியிட, அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். விசிக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:

* ஆளுநர் பதவி ஒழிப்பு, ஆளுநரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கக் கூடாது.

* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, மாநிலங்களுக்கான உரிய நிதிப்பகிர்வு.

* அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள், அம்பேத்கர் பிறந்தநாளை அறிவுத்திருநாளாக அறிவிக்க வேண்டும்.

* ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு, தேர்தல் ஆணையர் நியமண சட்டம் ரத்து, வாக்குப்பதிவு முறைக்கு பதிலாக பழையபடி வாக்குத் தாள் முறை.

* 200 நாட்கள் வேலை வாய்ப்பு உறுதி சட்டம், விவசாயம் மற்றும் நிலச்சீர்த்திருத்தம், விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம்.

* ஜிஎஸ்டி வரி ஒழிப்பு, வருமான வரி சீரமைப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயத்திற்கு தனி பட்ஜெட்.

* பெட்ரோலியப் பொருட்களின் மீது அரசின் விலைக் கட்டுப்பாடு, நீட் தேர்வு ரத்து. இதேபோல் பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று உள்ளது.

* பாஜவை வீழ்த்துவதே இலக்கு

தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள திருமாவளவன் பேசுகையில், ‘இந்த பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும். இது ஒரு பாசிச அரசு. கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் முயற்சி எடுத்து இந்தியா கூட்டணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி இருக்கிறார். இந்தியா கூட்டணியின் முதல்புள்ளியை தொட்டு தொடங்கி வைத்தவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அவர் தேசிய அளவில் இந்த தேர்தல் வியூகத்தை அமைத்திருக்கிறார். பாஜவுக்கு எதிரான திமுகவின் முயற்சிக்கு, விசிக துணை நிற்கும். பாஜ அரசை வீழ்த்துவது தான் ஒன்றை இலக்கு‌’ என்றார்.

* கியூஆர் கோடு மூலம் டிஜிட்டல் பிரசாரம்

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் டிஜிட்டல் முறையிலான கியூஆர் கோடு பிரசாரத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதையடுத்து சிதம்பரம் தொகுதியில் பல பகுதியிலும் விசிகவினர் கடைகள் மற்றும் வாகனத்தில் கியூஆர் கோடு ஒட்டி பொதுமக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கியூஆர் கோடை நமது செல்போனில் ஸ்கேன் செய்தால் வரும் தேர்தலின் முக்கியத்துவம், தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்றும் தனக்கும் தொகுதிக்குமான உறவு குறித்தும் திருமாவளவன் பேசும் வீடியோ ஒளிபரப்பாகும். இதனை கட்சியினர் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவலுடன் கண்டுகளித்து வருகின்றனர்.