Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ.100 ஆக குறைப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருவள்ளூர் : ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.200 /- சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ.100/- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா ஆகிய இரண்டு திருவிழாக்களுக்கு சுவாமி தரிசனம் செய்திட சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ.200லிருந்து ரூ.100ஆக குறைக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு என்று போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 தேதிகளில் நடைபெறும். திருப்படி திருவிழாவிற்கு தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்தாண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா 27.07.2024 முதல் 31.07.2024 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் .ஆர்.காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு ஆகியோர் தலைமையில் 23. 07.2024 அன்று ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படித் திருவிழா ஆகிய இரண்டு திருவிழாக்களின்போது சிறப்பு வழி தரிசனக் கட்டணம் ரூ.200ஐ குறைத்திட வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் திருக்கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி கட்டணத்தை மாற்றி அமைத்திட திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அரசின் அனுமதி கோரப்பட்டிருந்தது. முதலமைச்சர் உத்தரவின்படி, திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு வழி நுழைவுக் கட்டணம் ரூ. 200/- ஐ குறைத்து ரூ.100/- ஐ நடைமுறைப்படுத்திட ஆணையிடப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.