Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காலை 9.15 மணிக்குள் வரவில்லை என்றால் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அரைநாள் சம்பளம் பிடித்தம்: புதிய உத்தரவு அமல்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், ‘நாட்டின் அனைத்து ஒன்றிய அரசு ஊழியர்களும் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்திற்கு வரவேண்டும். சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு வருவது முக்கியமல்ல, அங்குள்ள பயோமெட்ரிக் வருகை முறையை பின்பற்ற வேண்டும். மூத்த பணியாளராக இருந்தாலும் அல்லது இளைய பணியாளராக இருந்தாலும், அனைத்து ஊழியர்களும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அலுவலகத்திற்கு தாமதமாக வந்தால் அரை நாள் வருகை பதிவு பதியப்படும். எந்த காரணத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட நாளில் பணியாளரால் அலுவலகத்திற்கு வர முடியவில்லை என்றால், அதுகுறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அவசர காலங்களில் விடுப்பு தேவைப்பட்டால், அதற்கும் விண்ணப்பிக்க வேண்டும். அதிகபட்சம் 15 நிமிடம் தாமதமாக அலுவலகத்திற்கு வர அனுமதிக்கப்படுவார்கள்’ என கூறியுள்ளது.