Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றியவர்கள் இன்று ஒரே நாளில் 8,144 பேர் பணி ஓய்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் இன்றுடன் ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு பெற்றனர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58ல் இருந்து 60 ஆக கடந்த அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆகும். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள், தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்று வருவார்கள்.

குறிப்பாக மே மாத்தில்தான் அதிகம் பேர் ஓய்வு பெறுவார்கள். அதற்கு முக்கிய காரணம், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்த முழு ஆண்டு முடிவு பெறும்போது மே மாதத்தில்தான் ஓய்வு பெறுவார்கள். அதனடிப்படையில் இன்றுடன் (31ம் தேதி) ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெறுகின்றனர். அதாவது மாநில அரசின் குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், பி பணியிடங்களில் 4 ஆயிரத்து 399 பேரும், சி பணியிடங்களில் 2 ஆயிரத்து 185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் ஓய்வு பெறுகிறார்கள். கல்லூரி பேராசிரியர்களை பொறுத்தவரை ஏ பிரிவிலும், ஆசிரியர்களை பொறுத்தவரை பி பிரிவிலும் ஊழியர்களாக இருப்பார்கள்.

இந்தாண்டில் ஒரே மாதத்தில் அதிகம் பேர் ஓய்வு பெறுவது இந்த மாதத்தில்தான். இந்த எண்ணிக்கை மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதமாகும். இதில் சில ஊழியர்கள் தாமாக முன்வந்து முன்கூட்டிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.