நாராயண்பூர்: சட்டீஸ்கரின் நாராயண்பூரில் அபுஜ்மத் பிராந்தியத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பதுங்கி இருந்த நக்கல்கள் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதனால் பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். வீரர்கள் மற்றும் நக்சல்களுக்கு இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில் 6 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
+
Advertisement