வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையில் விமானம் தாங்கி கப்பலில் இருந்து 30 நிமிடங்களில் போர் விமானம், ஹெலிகாப்டர் தென்சீனக்கடலில் விழுந்தது. ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் வணிக கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் பதிலடியாக மத்திய கிழக்கில் நிறுத்தப்பட்டு இருந்த யூஎஸ்எஸ் நிமிட்ஸ் வாஷிங்டன்னில் உள்ள கிட்சாப் கடற்படை தளத்திற்கு திரும்புகின்றது. இந்நிலையில் யூஎஸ்எஸ் விமானம் தாங்கி கப்பலில் இருந்து சுமார் 30 நிமிடங்களில் ஒரு போர் விமானமும் ஹெலிகாப்டரும் தென்சீனக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளது. இதில் எம்எச்-80ஆர் ஹெலிகாப்டரில் இருந்த 3 பணியாளர்கள் நேற்று முன்தினம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும் சூப்பர் ஹார்னெட் போர் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 2 விபத்துக்களுக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
+
Advertisement
