சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே தெரிவித்ததாவது; மும்பையில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்.22157), வரும் செப்டம்பர் 5ம் தேதி முதலும், மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22158), வரும் செப்டம்பர் 8ம் தேதி முதலும், ஒரு 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி, ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மாற்றாக, 2-வது வகுப்பு பொதுபெட்டி 2 இணைத்து இயக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22154), வரும் செப்டம்பர் 6ம் தேதி முதலும், மறுமார்க்கமாக, சேலத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (22153), வரும் செப்டம்பர் 7ம் தேதி முதலும், ஒரு 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி, ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மாற்றாக 2-வது வகுப்பு பொது பெட்டி 2 இணைத்து இயக்கப்பட உள்ளது.
மராட்டிய மாநிலம் தாதரில் இருந்து புறப்பட்டு நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (11021), வரும் செப்டம்பர் 9ம் தேதி முதலும், மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து புறப்பட்டு தாதர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (11022), வரும் செப்டம்பர் 11ம் தேதி முதலும், ஒரு படுக்கை வசதி பெட்டிக்கு மாற்றாக 2-வது வகுப்பு பொது பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்பட உள்ளது.