சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு அவ்வளவு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Advertisement