Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

1000 ரன், 50 விக்கெட்டுகள் கபில் தேவ், ஷகிபை முந்திய ஸ்காட்லாந்தின் மெக்கல்லன்; 33 போட்டிகளில் அசத்தல் சாதனை

டுன்டீ: உலக கோப்பை லீக் 2 ஒரு நாள் போட்டிகள் நெதர்லாந்தின் டுன்டீ நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் ஸ்காட்லாந்து - நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் ஸ்காட்லாந்து வீரர் பிராண்டன் மெக்கல்லன் அபாரமாக பந்து வீசி, 10 ஓவர்களில் 40 ரன்கள் தந்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம், 33 போட்டிகளில் (இன்னிங்ஸ்கள்) 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தவிர, பேட்டிங்கில் 1,149 ரன்களை அவர் குவித்துள்ளார். இதனால், குறைந்த போட்டிகளில் 50 விக்கெட், 1000 ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் பல ஜாம்பவான் வீரர்களை பின்னுக்கு தள்ளிய, மெக்கல்லன் 2ம் இடத்தை பிடித்துள்ளார்.

இந்த சாதனைப் பட்டியலில், நெதர்லாந்து வீரர் ரையான் டென் டோஸ்சேட் (28 இன்னிங்ஸ்) முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில், ஓமன் வீரர் ஜீசன் மக்சூட் (37 இன்னிங்ஸ்), நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் (40 இன்னிங்ஸ்), தென் ஆப்ரிக்காவின் லான்ஸ் க்ளுஸ்னர் (42 இன்னிங்ஸ்), ஆஸ்திரேலியா ஜாம்பவான் கிரேக் சாப்பல் (44 இன்னிங்ஸ்), இந்திய ஜாம்பவான் கபில் தேவ், ஆஸி நட்சத்திர வீரர் ஸ்டீவ் வாவ் (தலா 46 இன்னிங்ஸ்), வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் (50 இன்னிங்ஸ்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.