தஹோத்: குஜராத்தில் கடந்த 2021 முதல் 2024 வரை மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின்(100 நாள் வேலை திட்டம்) கீழ் ஒதுக்கப்பட்ட பணிகளை முடிக்காமலும், தேவையான பொருட்களை வழங்காமலும் பல ஒப்பந்த நிறுவனங்கள் மாநில அரசிடம் இருந்து பணம் பெற்று ரூ.71 கோடி மோசடி நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் கள ஆய்வு மூலம் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மாநில பஞ்சாயத்து மற்றும் விவசாயத்துறை அமைச்சர் பச்சுபாய் கபாத்தின் மூத்த மகன் பால்வந்த் உட்பட 7 பேர் கடந்த 2 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் அமைச்சரின் 2வது மகன் கிரணும் நேற்று கைது செய்யப்பட்டார்.
Advertisement


