Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கேதர்நாத்தில் தொடரும் ஹெலிகாப்டர் விபத்துகள்: 40 நாட்களில் 5 விபத்துகளால் கட்டுப்பாடு மையம் அமைக்க கோரிக்கை

கேதர்நாத்: கேதர்நாத்தில் 40 நாட்களில் 5 ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்ந்துள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உத்தரகண்டின் கேதர்நாத் இமயமலை பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீக தலமாகும் இப்பகுதியில் நேற்று அதிகாலை நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்துகள் விமானி மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தது கேதர்நாத் பகுதியில் மேற்கொள்ளப்படும் ஹெலிகாப்டர் பயணங்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த பகுதிகளில் எந்த வித கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது மட்டுமின்றி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையமோ, ரேடார் மற்றும் வானிலை கண்காணிப்புகூட இல்லாமல் தான் ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டிருக்கின்றன.

நாள் ஒன்றுக்கு 300 ஹெலிகாப்டர்கள் வரை பறந்து கொண்டிருந்த நிலையில் அண்மையில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் தலையீட்டுக்கு பிறகு 1 மணி நேரத்துக்கு 9 ஹெலிகாப்டர்கள் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த 40 நாட்களில் 5 ஹெலிகாப்டர்கள் விபத்தை சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கேதர்நாத் பகுதியில் நிகழும் ஹெலிகாப்டர்கள் விபத்துக்கு பனிமூட்டம் தொழில்நுட்ப கோளாறு, மிக அதிக உயரத்தில் பறப்பது போன்றவை முக்கிய காரணங்களாக கற்றுத்தப்படுகிறது.

2022 அக்டோபர் மாதம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் இயக்கத்தை கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன ஆனால் சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளோடு ஒப்பிடும் போது போதுமானதாக இல்லை என ஆய்வு அலகுகள் தெரிவிக்கின்றன. ரேடார் கண்காணிப்பு இல்லாமல் கணிக்க முடியாத வானிலையில் ஹெலிகாப்டர்கள் பறப்பது சூதாட்டத்திற்கு ஒப்பானது என ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ஒருவரின் மனைவி விமர்சித்துள்ளார். இந்த பின்னணியில் கேதார்நாத்தில் விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு மையமும் வானிலை ஆய்வு மையமும் உடனடியாக நிறுவப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.