Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

1971ம் ஆண்டு போர் குறித்து தவறான தகவல்: ராகுல் மீது பாஜ எம்பி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிரான போர் தொடர்பாக ராகுல்காந்தி தவறான உண்மைகளை கூறுவதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவரை கண்டிக்கும்படி அவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நிஷிகாந்த் கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த கடிதத்தில், ‘‘மக்களவையில் செவ்வாயன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின்போது ராகுல்காந்தி, தனது பாட்டியான முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆயுதப்படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கியதாகவும், மோடி அரசாங்கம் ஆயுதப்படையின் கைகளை அவர்களின் முதுகிற்கு பின்னால் கட்டியதாகவும் கூறியிருந்தார். 1971ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அப்போதைய பிரதமர் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த கடிதத்தில் பாகிஸ்தானுடனான போரை நிறுத்துவதற்கு தங்களது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என்று அவரிடம் கெஞ்சியிருந்தார் ராகுல்காந்தி மீண்டும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று உண்மைகளை திரித்து பொதுமக்களின் நம்பிக்கைக்கு வெட்கமின்றி துரோகம் செய்துள்ளார். ராகுல்காந்தியின் பேச்சுக்கு எதிராக அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவையில் இந்த பிரச்னையை எழுப்புவதற்கும் அனுமதிக்க வேண்டும்\” என்று குறிப்பிட்டு இருந்தார்.