விருத்தாசலம், டிச. 13: விருத்தாசலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமச்சந்திரன் பேட்டை மேம்பாலம் அருகே, அனுமதியின்றி திருட்டுத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் ரோட்டை சேர்ந்த வீரப்பன் (60) என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


