விக்கிரவாண்டி, ஆக. 7: விக்கிரவாண்டி சேஷங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மலா(51). இவரது மகன் பிரபாகரன். இவர் டிஎம்எல்டி படித்துவிட்டு வீட்டிலிருந்து வருகிறார். இந்நிலையில் நிர்மலாவிடம் பிரபாகரனுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாக விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டை சேர்ந்த கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, திரு குணத்தைச் சேர்ந்த சூர்யா ஆகியோர் கூறினர். மேலும் தங்களுக்கு அரசியல் பிரமுகர்களை தெரியும் எனக்கூறி கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரியில் வைத்து ரூ.3.5 லட்சம் பணம் நிர்மலாவிடம் 3ம் பேரும் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் வாங்கி 5 ஆண்டுகளாகியும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். நிர்மலா புகாரின் பேரில் விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகிறார்.
+
Advertisement