குடியாத்தம், நவ.29: குடியாத்தம் அருகே மனைவியை கடித்து பாம்புடன் சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் போடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தர்மபிரகாஷ். இவரது மனைவி உமாதேவி(45). நேற்று இரவு வீட்டில் இருந்தபோது உமாதேவியின் காலில் 2 அடி நீளமுள்ள பாம்பு கடித்துள்ளது. இதனால் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த தர்மபிரகாஷ், அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு கவரில் போட்டுக் கொண்டு, மனைவி உமாதேவி மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு டாக்டர்கள், உமாதேவிக்கு உரிய சிகிச்சை அளித்தனர். முன்னதாக, தர்மபிரகாஷ் இந்த பாம்பு தான் எனது மனைவியை கடித்தது என கவரில் இருந்த பாம்பை எடுத்து டாக்டர்களிடம் காண்பித்தால் அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடினர்.
+
Advertisement

