வேலூர், ஆக.14: வேலூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்த 40 வயது பெண், தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவரது 14 வயது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த சிறுமியின் தாய், வேலூர் மேல்மொணவூரை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், தாய்க்கு செல்போனில் தெரிவித்தார். அவர் தனது காதலனுக்கு போன் செய்து மகளுக்கு காய்ச்சல் மாத்திரை கொடுக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து சிறுமிக்கு காய்ச்சல் மாத்திரை கொடுத்தபோது, அந்த வாலிபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி, தனது உறவினர் பெண் ஒருவருக்கு தெரிவித்தார். அவர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement