சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய உதயம் திரையரங்கின் பயணம் நிறைவு பெறுகிறது. சென்னை அசோக் நகரில் 1983-ம் ஆண்டில் 1.3 ஏக்கரில் உதயம் திரையரங்கு கட்டப்பட்டது. உதயம் திரையரங்கு வளாகம் உள்ள 1.3 ஏக்கர் நிலத்தை வாங்கும் தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட முடிவு செய்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளம் வணிக நிறுவனங்களுக்காக ஒதுக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்களின் படங்களை திரையிட்ட பெருமை உதயம் தியேட்டருக்கு உண்டு.
+
Advertisement