திருச்சி,டிச.13: திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து குழந்தைகளுக்கான சதுரங்கப் பயிற்சி முகாம் மாவட்ட மைய நூலகத்தில் நாளை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நாளை டிச.14ம் தேதி பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணி வரை குழந்தைகளுக்கான “சதுரங்கப் பயிற்சி முகாம்” மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியினை தேசிய சதுரங்க பயிற்சியாளர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளார்.
பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் சதுரங்கப் பலகை கொண்டு வரவும். இப்பயிற்சியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்ற தகவலை மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.


