துறையூர், டிச.8: துறையூர் அருகே அடையாளம் தெரியாத கார் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் துறையூர் முருகூர் பிரிவுசாலை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(68). இவர் துறையூர் ஆத்தூர் சாலையில் கரி மூட்டம் போடும் வேலை செய்து வருகிறார். நேற்று காலை ஆத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே நடந்து சென்ற போது, அவர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த துறையூர் போலீசார் அந்த இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


