திருச்சி, ஆக.1: நெல்லை மாவட்ட ஆணவ படுகொலையை கண்டித்து சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டம் கவின் என்ற இன்ஜினியர் காதல் விவகாரம் தொடர்பாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த ஆணவ படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது.
இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், இதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று பகல் கல்லூரி வாசல் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


