அருகி வரும் முதலை இனத்தை பாதுகாப்பதில் வெனிசுலா விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். Orinoco எனப்படும் முதலை இனம் அருகி வரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வெனிசுலா முதலை வளர்ப்பு நிபுணத்துவ குழுவினால் அருகி வரும் இந்த முதலைகளை அழிவிலிருந்து தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.