சூப்பர் புயலாக (Super typhoon) உருவெடுத்துள ரகாசா புயல் பிலிப்பைன்சை தொடர்ந்து தைவானை உலுக்கியது. தைவானில் கடும் சேதத்தை இந்த புயல் ஏற்படுத்தியது. 14 பேர் புயலின் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ரகாசா புயல் சீனாவின் தெற்கு கடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.