தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை கொட்டி தீர்த்த நிலையில் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பேருந்து, ரயில் சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தேரி, குர்லா, பாந்த்ரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.