மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் நாட்டிற்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் சிவப்பு கம்பளம் வரவேற்பு அளித்தார். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கினார்.