குடியேறிகளைக் கைது செய்யும் நடவடிக்கையை எதிர்த்து லாஸ் ஏஞ்சலிஸ் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அது கடந்த சில நாள்களாக வன்முறையாக மாறியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிபர் டிரம்ப் போர் வீரர்களைக் களமிறக்கியுள்ளார். “வன்முறையில் ஈடுபடுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். கிட்டத்தட்ட 700 போர் வீரர்கள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ளனர். அவர்கள் நான்கு நாள்களாக நடந்து வரும் போராட்டங்களை விரைவில் கட்டுப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.