ஐரோப்பாவில் வெற்றி தினத்தின் 80 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் லண்டனில் கோலாகலமாக தொடங்கியது. 2 ஆம் உலக போரின் இறுதியில் இட்லரின் நாஜிப்படைகள் பிரிட்டன் உள்ளிட்ட நேச படைகளுடன் சரணடைந்ததை கொண்டாடும் ஐரோப்பாவின் வெற்றி தின கொண்டாட்டம் லண்டன் வீதிகளில் கோலாகலமாக தொடங்கியது. அதன் அடையாளமாக லண்டனின் பிக் பென் கடிகாரம் ஒலி எழுப்பியது.