பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. பதிலுக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்நாடு அறிவித்தது. இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிழவியுள்ள சூழலில், தொடர்ந்து இரு நாட்டு மக்களும் தங்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். அந்த வகையில் இன்று நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தங்கள் உறவினர்களை அட்டாரி எல்லையில் வழியனுப்ப வந்தனர்.