சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் அரசாங்கத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக மாறியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.காத்மாண்டு மற்றும் பிற நகரங்களில் ‘ஜெனரேஷன் இசட்’ இளைஞர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில், காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.