இங்கிலாந்தில் குன்றின் சரிவில் அரக்க பறக்க ஓடி கீழே விழுந்து குட்டிக்கரணம் போட்டு இவர்கள் கூட்டமாக ஓடுவது சக்கர வடிவில் உருட்டிவிடப்பட்ட பாலாடை கட்டி எனப்படும் சீஸ் ரோலை பிடிப்பதற்காக தான். இங்கிலாந்தின் க்ளாசெஸ்டர்ஷைரில் தான் இந்த வினோத போட்டி நடத்தப்படுகிறது. 26 டிகிரி சாய் கோணத்தில் 180 உயரம் குன்றின் மேல் பகுதியில் இருந்து சக்கர வடிவிலான நான்கு கிலோ எடை கொண்ட சீஸ் உருட்டி விடப்படுகிறது. அதை ஒரே நேரத்தில் சுமார் 100 பேர் அடித்து பிடித்து கீழே விழுந்து வாரி, உருண்டு, புரண்டு, குட்டிக்கரணம் போட்டு பிடிக்க பாய்கின்றனர். முதலில் உருட்டி விடப்படும் சீஸை பிடிப்பது என்பது இயலாத காரியம் என்பதால் குன்றின் அடிவாரத்தில் உள்ள எல்லை கோட்டை முதலில் வந்தடைபவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுகின்றன.