பீகார் மாநிலம், ரோத்தாஸ் மாவட்டம், சசாரம் நகரில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, ஒளரங்காபாத்துக்கு பேரணி வந்தடைந்தது. தேவ் சூரிய மந்திரில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தரிசனம் செய்த பின்னர், இரண்டாம் நாள் பேரணியைத் தொடங்கினர். இந்த நிலையில், சாலையின் இருபுறங்களில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் மக்களும் நின்று ராகுல் காந்திக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.