Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கனரக வாகனங்களுக்கு 3 நாட்கள் தடை மாற்றுப் பாதைகள் அறிவிப்பு திருவண்ணாமலை நகரின் வழியாக செல்ல

திருவண்ணாமலை, நவ. 29: திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மூன்று நாட்கள் திருவண்ணாமலை நகருக்குள் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றுப்பாதையை பயன்படுத்த மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி திருவண்ணாமலை வழியாக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் 2ம் தேதி காலை 8 மணி முதல் 5ம் தேதி காலை 6 மணி வரை திருவண்ணாமலை வழியாக வந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களில் இருந்து விழுப்புரம், கடலூர் புதுச்சேரி வழித்தடங்களுக்கு செல்லும் வாகனங்கள், பர்கூர், வாணியம்பாடி, வேலூர், ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக செல்ல ேவண்டும். ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி வழித்தடங்களில் இருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களுக்கு செல்லும் வாகனங்கள் வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு, வேலூர், வாணியம்பாடி, பர்கூர் வழியாக செல்ல வேண்டும். வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், செஞ்சி, திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை. திருப்பதி, கே.ஜி.எப். வேலூர் வழித்தடங்களில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி வழித்தடங்களுக்கு செல்லும் வாகனங்கள், வேலூர், ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி வழியாக செல்ல வேண்டும். கண்ணமங்கலம், போளூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை. திண்டிவனம், விழுப்புரம் கடலூர், திருச்சி, புதுச்சேரி வழித்தடங்களில் இருந்து, திருப்பதி, கே.ஜி.எப், வேலூர் வழித்தடங்களுக்கு செல்லும் வாகனங்கள், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு, வேலூர் வழியாக செல்ல வேண்டும். வேட்டவலம், செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.

பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களில் இருந்து விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம் வழித்தடங்களில் செல்லும் வாகனங்கள், தர்மபுரி, தொப்பூர், சேலம், வாழப்பாடி, ஆத்தூர் வழியாக செல்ல வேண்டும். ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக செல்ல அனுமதி இல்லை. விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம் வழித்தடங்களில் இருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களுக்கு செல்லும் வாகனங்கள், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர், வாழப்பாடி, சேலம், தொப்பூர், தர்மபுரி வழியாக செல்ல வேண்டும். திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, சங்கராபுரம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.