செய்யாறு, டிச.15: செய்யாறு பஸ் ஸ்டாண்டில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். செய்யாறு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தனிப்பிரிவு போலீஸ் முருகன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பஸ் ஸ்டாண்ட் பொதுக் கழிப்பிடம் அருகே வாலிபர் கையில் கத்தியுடன் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்து கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். அவரை பிடித்து விசாரித்ததில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பெருவளூர் கிராமத்தை சேர்ந்த சம்பத் மகன் காமராசு(18) என்பது தெரியவந்தது. சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வருவதும், செய்யாறு அடுத்த எச்சூர் கிராமத்தில் கம்பெனி ஊழியர்களை இறக்கி விட்டு வழக்கம்போல் பஸ்சை அங்கே நிறுத்திவிட்டு செய்யாறுக்கு நண்பருடன் வந்த இடத்தில் போதையில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து காமராசுவை கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.


