செங்கம், டிச.1: செங்கத்தில் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரிஷபேஸ்வரர் கோயிலில் உள்ள சித்தர் ஜீவசமாதி குறித்து ஆய்வு நடந்து வருவதாக இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட இணை ஆணையர் பிரகாஷ் கூறினார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சுமார் 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயில் உள்ளது. மத்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்று வரும் ஜனவரி மாதம் 28ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
+
Advertisement

