திருப்பூர், ஜூலை 31: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (32). சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவரது மனைவி மணிமரியாள் (33). இவர்கள், திருப்பூர்- ராயபுரம் பகுதியில் வசித்து வருகின்றனர். சில மாதங்களாக கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெரியசாமி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது மணிமரியாள் வீடியோ காலில் உறவினருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
இதனைபார்த்த பெரியசாமி ஆத்திரத்தில் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். பெரியசாமி தாக்கியதில் காயமடைந்த மணி மரியாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் பெரியசாமியை கைது செய்தனர்.