திருப்பூர், ஆக. 1: திருப்பூர், அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகமணி (37). இவருக்கு, திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நாகமணி தன் வீட்டிற்கு முன்பு வாழைமரம் வைத்துள்ளார். அந்த வாழை மரத்தை பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான மாடு மேய்ந்து விட்டது.
இதுகுறித்து நாகமணி பாலசுப்பிரமணியத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சம்பவத்தை கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியம், நாகமணியின் வீட்டிற்கு வந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி காயப்படுத்தினார். இதுகுறித்த புகாரின்பேரில் வடக்கு போலீசார் பாலசுப்பிரமணியம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.