திருப்பூர், டிச.12: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து வட்டங்களிலும் நடைபெறுகிறது. அதன்படி, அவினாசி நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் கொக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் பாப்பினி வரதப்பம்பாளையம் கூட்டுறவு கடன் சங்கம், மடத்துக்குளம் கணியூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கம், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூர் வடக்கு கணக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கடன் சங்கம், திருப்பூர் தெற்கு இடுவாய் ஊராட்சி மன்ற அலுவலகம், உடுமலை குருஞ்சேரி தொடக்க வேளாண்மை கடன் சங்கம், ஊத்துக்குளி நடுப்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்கம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட குடும்ப அட்டை தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


